Friday 9 April 2010

தமிழ் மொழியின் சிறப்பு.....

தமிழ் மொழியின் சிறப்பு:

1 = ONDRU -one
10 = PATHU -ten
100 = NOORU -hundred
1000 = AAYIRAM -thousand
10000 = PATTAYIRAM -ten thousand
100000 = NOORAYIRAM -hundred thousand
1000000 = PATTU NOORAYIRAM - one million
10000000 = KOODI -ten million
100000000 = ARPUTHAM -hundred million
1000000000 = NIGARPUTAM - one billion
10000000000 = KUMBAM -ten billion
100000000000 = KANAM -hundred billion
1000000000000 = KARPAM -one trillion
10000000000000 = NIKARPAM -ten trillion
100000000000000 = PATHUMAM -hundred trillion
1000000000000000 = SANGGAM -one zillion
10000000000000000 = VELLAM -ten zillion
100000000000000000 = ANNIYAM -hundred zillion
1000000000000000000 = ARTTAM -??????
10000000000000000000 = PARARTTAM --???????
100000000000000000000 = POORIYAM ---????????? ?????
1000000000000000000000 = MUKKODI -??????????? ???????
10000000000000000000000 = MAHAYUGAM -??????????? ??????

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே.... முன் தோன்றிய மூத்த குடி ......

தமிழ் மிகவும் பழமையான மொழி .....
அது இன்றும் புழக்கத்தில் இருப்பது அதென் பெருமை.

ஆனால் இன்று தமிழ் மக்களால் தமிழ் மொழி மெல்ல அழிய தொடங்கி விட்டது.

தம் பிள்ளைகள் தமிழ் மொழி வழி கல்வி கற்பதை இன்று அனைத்து பெற்றோர்களும் விரும்புவது இல்லை.

ஆங்கிலம் வழி கல்வி கற்பதை இன்று அனைத்து பெற்றோர்களும் விரும்புகின்றனர்.....

இன்று ஆங்கிலம் உலகின் பலரும் பேசும் மொழி என்பது உண்மை......

எனது ஆதங்கம் எல்லாம் தமிழ் மொழியை இரண்டாவது மொழியாக கூட ஏற்க மறுப்பது ஏன் என்பதுதான் .....

இந்நிலை கிராமங்களில் குறைவாக இருப்பது சற்று ஆறுதாலான விசயம்..

நகரத்தில் உள்ள பெற்றோர்கள் தமிழ் மொழியின் சிறப்பை தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்தால்

அழியும் நிலையில் உள்ள தமிழை காப்பாற்ற முடியும்..

மறுபிறவி.....

ஹிந்து மத நண்பர்களுக்கு மறுபிறவி பற்றி ஒரு சிறிய விளக்கம் :


மறு பிறவி என்பது கற்பனையே தவிர வேறில்லை என்பதைச் சிரமமின்றி நிரூபித்து விடலாம்.

அதற்கு முன்னால் மறு பிறவி என்பது என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
மனிதர்கள் இன்று நல்ல வாழ்வைப் பெற்றிருந்தாலும் மோசமான வாழ்வைப் பெற்றிருந்தாலும் அதற்குக் காரணம் முந்தைய பிறவியில் அவர்கள் செய்த வினை தான். இந்தப் பிறவியில் ஒருவன் நல்லவனாக வாழ்ந்தால் அடுத்த பிறவியில் சகல இன்பங்களையும் பெற்று வாழ்வான்.

இப்படி ஏழு ஜென்மங்களை எடுப்பதாகக் கூறுகின்றனர். மனிதனோடு மட்டும் இதை நிறுத்திக் கொள்வதில்லை. மற்ற உயிரினங்கள் வரை விரிவு படுத்துகின்றனர்.

நாம் ஒரு நாயைச் சித்திரவதை செய்தால் அடுத்த பிறவியில் நாம் நாயாகவும் நாய் மனிதனாகவும் பிறப்பெடுப்போம். அப்போது மனிதனாகப் பிறப்பெடுத்த நாய், நாயாகப் பிறப்பெடுத்த நம்மை அதே போன்று சித்திரவதை செய்யும் என்றெல்லாம் உபன்னியாசங்களில் நாம் கேட்டுள்ளோம்.

இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு இன்னொரு அடிப்படை உண்மையைக் கவனியுங்கள்.

இன்றைக்கு உலகில் 600 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். நூறு வருடங்களுக்கு முன்னால் இதில் கால்வாசி அளவுக்குத் தான் மக்கள் தொகை இருந்தது.

இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மேலும் முன்னே சென்று கொண்டே இருந்தால் மனிதர்கள் சில ஆயிரம் பேர் தான் இருந்திருப்பார்கள்.

இன்னும் முன்னேறிச் சென்றால் ஒரே ஒரு ஜோடியில் போய் முடிவடையும்.
மனிதன் மட்டுமின்றி ஏனைய உயிரினங்களை எடுத்துக் கொண்டாலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சென்று கொண்டே இருந்தால் ஒவ்வொரு உயிரினமும் ஒரு ஜோடியில் போய் முடியும்.

அனைத்து உயிரினங்களும் ஒரே ஒரு ஜோடியிலிருந்து தான் பல்கிப் பெருகின.

மனிதனையும் சேர்த்து எத்தனை வகை உயிரினங்கள் உலகில் உள்ளன என்று நம்மிடம் கணக்கு இல்லை.

உதாரணத்துக்காக ஐம்பது லட்சம் வகை உயிரினங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு வகை உயிரினத்திற்கும் ஒரு ஜோடி என்று வைத்துக் கொண்டால் ஐம்பது லட்சம் ஜோடிகள் அதாவது ஒரு கோடி உயிரினங்கள் இருந்திருக்கும்.

மறு பிறவி என்று ஒன்று இருந்தால் இந்த எண்ணிக்கை அதிகமாகக் கூடாது. இந்த ஒரு கோடி உயிரினங்கள் தான் அடுத்த ஜென்மத்திலும் இருக்க வேண்டும்.

வேண்டுமானால் ஆடு மனிதனாக, மனிதன் ஆடாக பிறப்பெடுக்கலாமே தவிர, ஒரு கோடியை விட அதிகமாகவே கூடாது.

ஒரு கோடியாக இருந்த உயிரினங்கள் இரண்டு கோடியாக பெருகினால் அதற்குப் பெயர் மறுபிறவி அல்ல. புதிய உயிர்களின் உற்பத்தி என்றே கூற வேண்டும்.

பாரதியார் முப்பது கோடி முகமுடையாள் என்று பாடினார். அப்போது இந்தியாவில் முப்பது கோடி மக்கள் இருந்தனர். அவர்கள் மறு பிறவி எடுத்தால்

இப்போதும் முப்பது கோடி தான் இருக்க வேண்டும். 70 கோடிப் பேர் அதிகமாகியுள்ளோம். நாம் மட்டும் அதிகமாகவில்லை. அனைத்து உயிரினங்களும் அதிகமாகியுள்ளன.

புதுப் புதுப் பிறவிகள் உற்பத்தியானால் மட்டுமே இது சாத்தியமாகுமே தவிர பழையவர்களே மீண்டும் பிறந்தால் இப்படி தாறுமாறாகப் பெருகக் கூடாது. பெருக முடியாது. மறு பிறவி இல்லை என்பதற்கு இதை விட வேறு எந்தச் சான்றும் தேவையில்லை.

அதற்குச் சொல்லப்படுகின்ற தத்துவமும் ஏற்புடையதாக இல்லை. ஏற்கனவே செய்த பிறவிப் பயனையே இப்போது அனுபவிக்கிறோம் என்பதற்கு இவர்கள் கூறும் தத்துவம் என்ன?

இவ்வுலகில் நாம் கெட்ட காரியம் செய்தால் அடுத்த பிறவியில் அனுபவிப்போம் என்று கூறினால் மனிதன் நல்லவனாக வாழ்வான் என்பது தான் தத்துவம்.

ஒருவருக்குத் தண்டனை கொடுப்பதாக இருந்தால் இன்ன குற்றத்துக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது என்று அவருக்குத் தெரிய வேண்டும். அது தான் தண்டனை. பரிசு கொடுப்பதாக இருந்தாலும் எந்தச் செயலுக்காக அந்தப் பரிசு கிடைத்தது என்பதை அவர் உணர வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் பரிசுகளாலோ, தண்டனைகளாலோ எந்தப் பயனும் ஏற்படாது.

இந்தப் பிறவியில் துன்பம் அனுபவிக்கும் யாருக்காவது நாம் இதற்கு முன் எந்தப் பிறவியில் இருந்தோம் என்பது தெரியுமா? நிச்சயம் தெரியாது! என்ன பாவம் செய்ததற்காக இந்த நிலையை அடைந்தோம் என்று தெரியுமா? அதுவும் தெரியாது. அப்படியானால் அவன் அடுத்த பிறவியைப் பற்றிக் கவலைப்பட்டு எப்படி நல்லவனாக வாழ்வான்?

ஒருவன் கொலை செய்து விடுகிறான். அக்குற்றம் நிரூபிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் கொலை செய்தவனுக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

இந்த நிலையில் அவனுக்குத் தூக்குத் தண்டனை வழங்க மாட்டார்கள். அவனே உணராமல் அவனைத் தண்டிப்பது தண்டனையாகாது; அதில் பயனும் இருக்காது என்று உலக அறிஞர்களின் ஒருமித்த அறிவு இவ்வாறு தீர்ப்பளிக்கிறது.

அனைவரையும் படைத்த கடவுளுக்கு இந்த அறிவு கூட இருக்காதா? நான் என்ன செய்தேன் என்பது எனக்கே தெரியாமல் இருக்கும் போது என்னைத் தண்டிப்பது கடவுளின் தகுதிக்கும், நீதிக்கும் சரியாக இருக்குமா?

எனவே தத்துவ ரீதியாக விவாதித்தாலும் மறு பிறவி சரிப்பட்டு வரவில்லை. காரண காரியத்தோடு அலசினாலும் சரிப்பட்டு
வரவில்லை.

விளக்கம் அளித்தவர்: P.J.

For more Information please visit www.onlinepj.com.

விதி.....


விதியை பற்றிய என்னுடைய பல நாள் சந்தேகம் PJ அவர்களால் தெளிவு பெற்றது.


கேள்வி:

''அனைத்து செயல்களும் இறைவனால் செய்யப்படுகிறது என்றால், மனிதன் செய்யும் தீய செயலும் இறைவனால் தான் செய்யப்படுகிறது. அப்படி இருக்கும் போது அவனுக்கு நரகம் கொடுப்பது எவ்வகையில் நியாயம்?''


பதில்:

விதியை நம்புவதால் நீங்கள் கூறுவது போன்ற கேள்விகள் எழுகின்றன. விதியை நம்பவில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்போது வேறு விதமான கேள்விகளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஒவ்வொரு மனிதனும் தனது முடிவின் படி தான் செயல்படுகிறான். இதில் இறைவனின் தலையீடு ஏதுமில்லை என்று நம்பினால் நீங்கள் கேட்டுள்ள கேள்வியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

ஆனால், கடவுள் என்பவன் பலவீனனாக, கையாலாகாதவனாகக் கருதப்படும் நிலை இதனால் ஏற்படும்.

''நடந்தது, நடந்து கொண்டிருப்பது, இனி நடக்கவிருப்பது அனைத்தையும் அறிந்தவன்'' என்பது கடவுளின் பண்பாகும். அந்தப் பண்பு இல்லாதவன் கடவுளாக இருக்க முடியாது.

நாளைய தினம் நீங்கள் சென்னை வரவிருக்கிறீர்கள். இது இன்றைக்கே இறைவனுக்குத் தெரியுமா என்று கேட்கப்படும் போது தெரியாது என்று நீங்கள் கூறினால் அப்படி ஒருவனை இறைவனாக ஏற்கத் தேவையில்லை.நாளை நடப்பது எப்படி எனக்குத் தெரியாதோ அது போல இறைவனுக்கும் நாளை நடப்பது தெரியாது என்று ஆகிறது.

நாளை நீங்கள் சென்னை வருவது இன்றைக்கே இறைவனுக்குத் தெரியும் என்பது உங்கள் விடையாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்திருக்கிறானோ அது நடந்து தீர வேண்டும்.

நாளை எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்துள்ளானோ அதைத் தான் உங்களால் செய்ய முடியுமே தவிர அதை மீற முடியாது என்பதும் இந்த விடைக்குள் அடங்கியுள்ளது.

அதாவது நாளை என்ன நடக்கும் என்பது இறைவனுக்குத் தெரியும் என்று நீங்கள் நம்பினால் விதியின் நம்பிக்கையும் அதனுள்
அடங்குகிறது.அவனுக்குத் தெரியாது என்று நம்பினால் அப்படி ஒரு இறைவன் தேவையில்லை என்று ஆகிறது.

இரண்டு நம்பிக்கைகளிலுமே சில சங்கடங்கள் உள்ளன.

இதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''விதியைப் பற்றி மட்டும் சர்ச்சை செய்யாதீர்கள்! உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயத்தினர் அழிந்தது விதியில் சர்ச்சை செய்த காரணத்தினாலேயே'' என்று கூறியுள்ளார்கள்.(நூல்: அஹ்மத் 6381)

இஸ்லாத்தின் கொள்கை, கோட்பாடு, சட்டத் திட்டம் பற்றி என்ன கேள்வி கேட்கப்பட்டாலும் அதற்கு அறிவுப்பூர்வமான விடை இஸ்லாத்தில் உண்டு. விதியைப் பற்றி மட்டும் விவாதிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்து விட்டதால் அதற்கு மேல் எவரும் விளக்கம் கூற முடியாது.அப்படிக் கூற ஆரம்பித்தால் மேலே நாம் சுட்டிக் காட்டிய இரண்டு சங்கடங்களில் ஒன்றை எதிர் கொள்ளாமல் இருக்க முடியாது.

அறிவுப்பூர்வமான பல்லாயிரக்கணக்கான கொள்கை கோட்பாடுகளைத் தந்த இறைவன் நம்மைச் சோதிப்பதற்காகக் கூட இந்த நிலையை ஏற்படுத்தியிருக்கலாம்.

அதே நேரத்தில் விதியைப் பற்றி மற்ற மதங்களின் நம்பிக்கை போல் இஸ்லாத்தில் விதியைப் பற்றிய நம்பிக்கை அமையவில்லை.

''எல்லாமே விதிப்படி நடக்கும். எனவே உழைக்காதே! நோய் வந்தால் மருத்துவம் செய்யாதே'' என்று இஸ்லாம் கூறவில்லை.

மாறாக எது நடந்து முடிந்து விட்டதோ அந்த விஷயங்களில் மட்டுமே விதியின் மேல் பாரத்தைப் போடுமாறு இஸ்லாம் வழிகாட்டுகிறது.
எது நடக்கவில்லையோ அந்த விஷயங்களில் விதி என்று ஒன்று இல்லாவிட்டால் எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்குமாறு வழிகாட்டுகிறது; உழைக்கச் சொல்கிறது; பாடுபடச் சொல்கிறது.
எனவே இஸ்லாம் கூறுவது போல் விதியை நம்புவதால் மனிதனின் முன்னேற்றத்துக்குக் கடுகளவும் அது தடையாக இராது.

அதே நேரத்தில் விதியை நம்புவதால் மனித குலத்துக்குக் கிடைக்கும் நன்மைகளை நினைத்துப் பார்த்தால் அதற்காகவாவது விதியை நம்புவது தான் மனித குலத்துக்கு உகந்ததாகும்.

ஒரு மனிதன் தனது முழு சக்தியையும் பயன்படுத்தி ஒரு காரியத்தில் ஈடுபடுகிறான். அந்தக் காரியம் கைகூடவில்லை என்று வைத்துக் கொள்வோம்.

விதியை நம்புகின்றவன் ''நாம் என்ன தான் முயன்றாலும் இறைவனின் நாட்டமும் இருக்க வேண்டுமல்லவா?'' எனக் கூறி மறு நாளே சகஜ நிலைக்கு வந்து விடுவான்.

அவன் விதியை நம்பாதவன் என்று வைத்துக் கொள்வோம்.
இவ்வளவு பாடுபட்டும் கைகூடவில்லையே என்று புலம்பியே மன நோயாளியாவான். அந்த அளவுக்குப் போகா விட்டாலும் அவன் சகஜ நிலைக்கு வருவது மிகவும் தாமதமாகும்.

உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.(திருக்குர்ஆன் 57:23)

விதியை நம்புவதால் இரண்டு நன்மைகள் ஏற்படும் என்று இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

நமக்கு செல்வங்களையும், வசதிகளையும், வாய்ப்புகளையும் அல்லாஹ் தாராளமாக வழங்கினால் நம்மிடம் ஆணவமும், கர்வமும் குடியேறும்.விதியை நம்புவதன் மூலம் இந்த மன நோயிலிருந்து விடுபடலாம்.''இந்தச் செல்வங்கள் அல்லாஹ்வின் விதிப்படி தான் நமக்குக் கிடைத்துள்ளனவே தவிர நம்மால் அல்ல'' என்று நினைத்தால் ஆணவம் இருந்த இடம் தெரியாமல் மறையும்.

அது போல் தாங்க முடியாத துன்பம் நமக்கு ஏற்பட்டால் நாம் இடிந்து போய் விடுவோம். பல நாட்கள், பல மாதங்கள் எதிலும் ஈடுபாடு காட்டாமல் விரக்தியடைந்து விடுவோம். இந்த மன நோயையும் விதியின் மீதுள்ள நம்பிக்கை நீக்கும்.
''நம்மால் என்ன செய்ய முடியும்? அல்லாஹ்வின் நாட்டம் அவ்வளவு தான்'' என்று நினைத்தால் மிக விரைவாக ஒருவன் சகஜ நிலையை அடைவான்.

இவ்விரு நன்மைகளும் விதியை நம்புவதால் மனித குலத்துக்கு ஏற்படுவதாக இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

தனக்கு எவ்வளவு செல்வம் கிடைக்க வேண்டும் என்ற விதி இருக்கிறதோ, அதன்படி செல்வம் வந்து சேர்ந்து விடும் என்று நம்பி அவர் எந்தத் தொழிலும் செய்யாமல் வீட்டில் முடங்கிக் கிடக்க மாட்டார். மாறாக, செல்வத்தைத் தேடி அலைவார். இந்த அக்கறையை வணக்க வழிபாடுகளுக்கும் வழங்க வேண்டும் என்று அவர் நினைக்காதது முரண்பாடாகவும் உள்ளது.

எனவே, விதியைப் பற்றி சர்ச்சைகளைத் தவிர்த்து விட்டு மனிதர்களால் அறிந்து கொள்ள இயலாத ஒன்றிரண்டு விஷயங்களை அல்லாஹ் வைத்திருக்கிறான் என்று முடிவு செய்து, விதியை நம்புவதால் கிடைக்கும் பயன்களை மனதில் நிறுத்தி, விதியை நம்புவது தான் நல்லது.

ஆன்லைன் பீஜே

Friday 2 April 2010

சிந்திப்பது மூளையா? இதயமா?

சிந்திப்பது மூளையா? இதயமா?


பதில்:

மனிதர்களின் சிந்தனை எங்கே நிகழ்கிறது என்பதில் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை நிலவி வந்தது.சிந்திப்பது, மகிழ்ச்சியடைவது, இரக்கம் காட்டுவது, பொறாமை கொள்வது உள்ளிட்ட எல்லாக் காரியங்களும் இதயத்தில் தான் நிகழ்கின்றன என்ற நம்பிக்கை ஒரு கால கட்டத்தில் இருந்தது. நாடு, மொழி அனைத்தையும் கடந்து உலகம் முழுவதும் இப்படித் தான் நம்பி வந்தது.பின்னர், அறிவு சம்பந்தப்பட்டது மூளையிலும் ஆசை சம்பந்தப்பட்டது இதயத்திலும் நிகழ்வதாக ஒரு கருத்துக்கு உலகம் வந்தது.

இன்றைய விஞ்ஞானிகள் வேறு முடிவுக்கு வந்து விட்டாலும் கூட இன்றைக்கும் சாதாரண மக்களின் கருத்து இதுவாகத் தான் உள்ளது.
ஒருவன் படிப்பில், சிந்தனையில் குறைவாக இருக்கும் போதும், குறைந்த மதிப்பெண் வாங்கும் போதும், மூளை இருக்கிறதா?'என்று கேட்கிறோம்.
ஒருவன் கொடியவனாக, இரக்கமற்றவனாக, பேராசை பிடித்தவனாக இருந்தால் அவனுக்கு இதயம் உள்ளதா என்று கேட்கிறோம்.சிந்திப்பது மூளையின் வேலை எனவும், கவலைப்படுவது போன்றவை இதயத்தின் வேலை எனவும் மக்கள் நினைப்பதை இதிலிருந்து அறியலாம். இடைப்பட்ட காலத்தில் உலக மக்களின் கருத்து இதுவாகத் தான் இருந்தது. அது தான் இன்று வரை சாதாரண மக்களிடம் நீடிக்கிறது.

இரத்தத்தை முழு உடலுக்கும் விநியோகம் செய்வது மட்டுமே இதயத்தின் பணி; இதைத் தவிர வேறு எந்தப் பணியும் அதற்கு இல்லை என்பதை இன்றைய விஞ்ஞான உலகம் கண்டறிந்துள்ளது.

சிந்திப்பது சம்பந்தமான விஷயங்களும், ஆசை சம்பந்தமான விஷயங்களும் மனித உடலின் முழு இயக்கமும் மூளையில் தான் தீர்மானிக்கப்படுகின்றன. சிந்திப்பதும், கவலைப்படுவதும், மகிழ்ச்சியடைவதும், பேராசைப்படுவதும், கோபப்படுவதும் மூளையின் வேலை தான். அனைத்து செயல்களையும் மூளை தான் தீர்மானிக்கிறது.''இதயத்தில் உனக்கு இடம் இல்லை'' என்பது போன்ற வார்த்தைகளை இன்றைய விஞ்ஞானம் கேலி செய்கிறது. மூளையில் உனக்கு இடமில்லை என்று தான் கூற வேண்டும். ஒருவரை நேசிப்பதும், பகைப்பதும் கூட மூளையின் பணி தான்.


இனி கேள்விக்கு வருவோம்.

சிந்தனையைக் குறிப்பிடும் போது இதயம் எனக் கூறாமல் மூளை என்று குர்ஆன் கூறுவதாக வைத்துக் கொள்வோம். இன்றைய உலகத்தின் முடிவுடன் அது அற்புதமாகப் பொருந்திப் போகும்.ஆனால், இதயத்தில் தான் சிந்தனை மற்றும் உணர்வுகள் உள்ளன என்ற கருத்து நிலை பெற்றிருந்த காலத்தில் இவ்வாறு கூறியிருந்தால் அன்றைய மக்கள் இதையே காரணமாகக் காட்டி குர்ஆனை நிராகரித்திருப்பார்கள்.இதயத்தில் நடக்கிற காரியங்களை மூளையில் நடப்பதாக இறைவன் தவறாகக் கூறுவானா எனக் கேட்டு அன்றைய மக்கள் குர்ஆனை நிராகரித்திருப்பார்கள். அவர்கள் நிராகரித்திருந்தால் குர்ஆன் பாதுகாக்கப்பட்டு நம் காலம் வரை வந்து சேர்ந்திருக்காது.குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதைக் கவனத்தில் கொண்டு இதயம் எனக் கூறினால் அவர்கள் நிராகரிக்க மாட்டார்கள். ஆனால், 'மூளை தான் சிந்திக்கிறது' என்று கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் வாழும் மக்கள் அதை ஏற்க மாட்டார்கள். இன்றைய அறிவியல் உலகம் அதை உண்மை என ஏற்காது. இதையே காரணம் காட்டி குர்ஆன் இறைவேதமாக இருக்க முடியாது என்று வாதிடும்!

எனவே, அந்த இடங்களில் மூளை என்றும் குறிப்பிட முடியாது. இதயம் என்றும் குறிப்பிட முடியாது. ஒன்றுமே குறிப்பிடாமலும் இருக்க முடியாது.

இப்போது என்ன செய்வது? எல்லாக் காலத்துக்கும் பொருந்தக்கூடிய வகையில் இதை எவ்வாறு கூறுவது? நாமாக இருந்தால் இப்படிக் குழம்புவோம்.

அனைத்தையும் அறிந்த இறைவனுக்கு இவ்வாறு குழப்பம் ஏதும் இல்லை. அவன் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய வகையில் கூறவல்லவன்.அரபு மொழியில் 'கல்ப்' என்ற சொல்லுக்கு மூளை என்ற பொருளும் உள்ளது. இதயம் என்ற பொருளும் உள்ளது.அரபு இலக்கியங்களில் மூளையைக் குறிக்கவும், இதயத்தைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மூளை தான் எல்லாக் காரியங்களையும் நிகழ்த்துகிறது என்பதைக் கண்டு பிடிக்கும் முன் பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட அரபு அகராதி நூல்களில் (லிஸானுல் அரப், முக்தாருஸ் ஸஹாஹ்) சிந்திக்கும் திறன், மூளை, இதயம் ஆகிய அர்த்தங்கள் இச்சொல்லுக்கு உள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டையும் குறிக்கக்கூடிய இந்தச் சொல்லை அல்லாஹ் தேர்ந்தெடுத்து பயன்படுத்தியிருக்கிறான். இதயத்தில் தான் இந்தக் காரியங்கள் நிகழ்கின்றன என்ற நம்பிக்கை நிலவிய காலத்தில் குர்ஆனுக்கு மொழி பெயர்ப்பு செய்தவர்கள் இச்சொல்லுக்கு இதயம் என்று மொழி பெயர்த்தார்கள். அவர்களும் திருக்குர்ஆன் உண்மையே கூறியது என்று கருதினார்கள்.மூளை தான் எல்லாக் காரியத்தையும் செய்கிறது என்ற நம்பிக்கை நிலவுகின்ற இக்காலத்தில் அந்தச் சொல்லுக்கு மூளை என்றே பொருள் கொள்ள வேண்டும். அப்பொருளும் அச்சொல்லுக்கு அகராதியில் உள்ள பொருள் தான்.5:25, 7:179, 9:87, 9:93, 17:46, 18:57, 63:3 ஆகிய வசனங்களில் சிந்தனையுடன் தொடர்புபடுத்தியே கல்ப் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதயங்கள் என்று இங்கே தமிழாக்கம் செய்வது தவறாகும்.33:10, 40:18 ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே இச்சொல் இதயம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய எல்லா இடங்களிலும் மூளை என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் குறிப்பிட்டுள்ள இடங்களிலும் மூளை என்றே பொருள் கொள்ள வேண்டும். அரபு மூலச் சொல் அதற்கு இடம் தரக்கூடிய வகையில் தான் அமைந்துள்ளது.எதை நீங்கள் பலவீனமாகக் கருதி கேள்வி கேட்கிறீர்களோ, அதுவே இவ்வேதம் இறைவனுடையது என்பதை நிரூபிக்கும் பலமாக அமைந்துள்ளது.மூளை தான் மனிதனை முழுமையாக இயக்குகிறது என்ற உண்மை இறுதிக் காலத்தில் கண்டுபிடிக்கப்படும் என்ற உண்மையை அறிந்தவனால் தான் இவ்வாறு கூற முடியும். அது அருளப்பட்ட காலத்திலும் மறுக்கப்பட முடியாமல் காப்பாற்றி உண்மை கண்டறியப்படும் காலத்திலும் அதை மேலும் உண்மைப்படுத்தக் கூடிய வகையில் வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பது தான் இறைவேதம் என்பதற்கான நிரூபனங்களில் ஒன்றாகவுள்ளது.


for more information about islam please visit: www.onlinepj.com

பேராசிரியர் பெரியார்தாசன் இஸ்லாத்தைத் தழுவினார்


தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரும் பேராசிரியருமான முனைவர் பெரியார் தாசன் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். அவர் இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்று அறிவித்தார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார் தாசன். பெரியார் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் சிசுக் கொலைகள் குறித்த திரைப்படமான கருத்தம்மாவில் நடித்துள்ளார்.பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டு மக்களின் அபிமானத்தைப் பெற்றவர்.
சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு வருகை தந்த பெரியார் தாசன் அங்கு வைத்து இஸ்லாத்தைத் தழுவினார். கடந்த மார்ச் 12 அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார்.



for more information visit http://tmmk.in/

ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின் முக்கிய அம்சங்களும் பரிந்துரைகளும்


நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஒரு சிறு குறிப்பு :

1926 -ல் பிறந்தவர். அலஹாபாத் பல்கலைகத்தில் சட்டம் படித்தவர்.

ஒரிஸா உயர் நீதி மன்றத்தில் 1950-ல் வழக்கஞராக பணியை துவக்கினார்.1969-ல் ஒரிஸா உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாக பதவி ஏற்றார்.1981-ல் ஒரிஸா உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியானார்1983-ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியானார்.

25.9.1990. முதல் 24.11.1991 வரை இந்திய உச்ச நீதி மன்றத்தில் (சுப்ரீம் கோர்ட்) தலைமை நீதிபதியாக பதவிவகித்தார்

அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:


மக்கள் தொகை (பக்கம் 13)முஸ்லீம்கள் – 13.4 % (2001-ஆம் கணக்கெடுப்பு படி)

முஸ்லீம்களின் கல்வி அறிவு (பக்கம் 16,17)

1. முஸ்லீம்களில் எழுதபடிக்க தெரிந்தவர்கள் – 59.1 %

அதாவது 40.9% முஸ்லீம்களுக்கு எழுதபடிக்க தெரியாது.
2. முஸ்லீம்களில் 5 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் – 65.31% பேர்
3. முஸ்லீம்களில் 8-ஆம் வகுப்புவரை படித்தவர்கள் -15.14%

(அதாவது 100-க்கு 85 பேர் 8-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்)
4. 10-ஆம் வகுப்பு வரை – 10.96%

(அதாவது 100-க்கு 90 பேர் 10-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்)
5. 12-ஆம் வகுப்புவரை – 4.53%

(அதாவது 100-க்கு 95 பேர் 12-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்)
6. பட்டம் (டிகிரி) படித்தவர்கள் – 3.6% பேர்

குடி இருப்புகள் : (பக்கம் 23)

1. முஸ்லீம்களில் 34.63% பேர் குடிதண்ணீர், கழிப்பிட வசதி இல்லாத குடிசைகளில் வாழ்கின்றனர்.
2. முஸ்லீம்களில் 41.2% பேர் அடிப்படைகட்டமைப்பு இல்லாத வீடுகளில் வாழ்கின்றனர்.
3. மீதமுள்ள 23.76% முஸ்லீம்கள் பேர் மட்டுமே வசிக்கதகுந்த வீடுகளில்வாழ்கின்றனர்.

வறுமை கோட்டிற்க்குகீழ் வாழ்பவர்கள்: (பக்கம் 25)

இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினரைவிடவும் முஸ்லீம்கள்தான் அதிகம் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றனர்.


1. நகர்புரத்தில் 27.22 % முஸ்லீம்கள் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றனர்

2. கிராமபுரத்தில் 36.92% முஸ்லீம்கள் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றனர்.

அதாவது 100-க்கு 36 முஸ்லீம்கள் உணவு உடை, இருப்பிடம் இல்லாமல் வாழ தகுதி அற்ற நிலையில் வாழ்கின்றனர்.

வறுமைகோடு என்றால் என்ன ?


அரசு 13 காரணிகளை வைத்துள்ளது இதில் மிகவும் பின் தங்கி இருப்பவர்கள் வறுமைகோட்டிற்க்கு கீழ் உள்ளவர்களாக கருதபடுவர்.ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையில் பக்கம் 69, 185 முதல் 188 வரை வறுமைகோட்டிற்க்கு கீழ் உள்ளவர்களின் தகுதிகள் வரையருக்கப்பட்டுள்ளன.

இரண்டு ஆடைகளுக்கும் குறைவாக வைத்துள்ளவர்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு உண்பவர்கள். படிப்பறிவு இல்லாதவர்கள், நிலையான தங்குமிடம் இல்லாதவர்கள், வெட்ட வெளியில் கழிப்பிடம் செல்பவர்கள். வீட்டு உபகரணக்கள் (டிவி, ரேடியோ, மின் விசிறி, குக்கர் போன்றவை) இல்லாதவர்கள், (நிரந்தர வருமானம் இல்லாமல்) கூலி வேலை செய்பவர்கள், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாதவர்கள். இப்படி வாழ்பவர்களை அரசு வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ளவர்கள் என குறிப்பிடுகின்றது.
இந்தியாவில் முஸ்லீம்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மேலே குறிப்பிடப்பட்ட நிலையில் (வறுமை கோட்டிற்க்கு கீழ்) வாழ்கின்றன்ர். தமிழகத்தில் 5 -இல் ஒரு முஸ்லீம் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றார்
மாதவருமானம் (பக்கம் 30)ஒட்டுமொத்தமாக முஸ்லீம்களின் சராசரி மாத வருமானம் ரூ.1832.20 (ஒரு குடும்பத்திற்கு).

பரிந்துரைகளில் சில :

1. இந்திய அரசியல் அமைப்புசட்டம் Article 16 (4) விதி -படி சிறுபாண்மையினருக்கு 15% இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். அதில் 10% முஸ்லீம்களுக்கு கொடுக்கவேண்டும். ஏனெனில் முஸ்லீம்கள் ஒட்டுமொத்த சிறுபான்மை ஜனதொகையில் 73% உள்ளனர். மீதமுள்ள 5 சதவீதம் பிற சிறுபாண்மை சமுதாயத்திற்க்கு கொடுக்கப்படவேண்டும். சில இடங்களில் 10% இடத்திற்க்கு முஸ்லீம்கள் கிடைக்கவில்லை என்றால் பிற சிறுபாண்மை சமுதாயத்திற்க்கு அந்த இடங்களை வழங்கவேண்டும்.(பெரும்பாண்மை சமுதாயத்திற்க்கு கொடுக்ககூடாது)- (பக்கம் 150,152)

2. கல்வி வேலைவாய்ப்பு மட்டும் அல்லாமல் அரசு அறிவிக்கும் திட்டங்களிலும் முஸ்லீம்களுக்கு 10% இட ஒதுக்கீடும். பிற சிறுபாண்மை மக்களுக்கு 5% இட ஒதுக்கீடும் வழங்க வேண்டும். (பக்கம் 152)

3. SC/ST-க்கு இருப்பது போல் முஸ்லீம்களுக்கும் கல்வி கற்பதர்க்கான Eligibility criteria தகுதிகள் (மதிப்பெண்) தளர்ந்தபட வேண்டும். விண்னப்பங்களின் விலையும் குறைக்கப்பட வேண்டும். கல்வி கட்டணமும் குறைக்கப்பட வேண்டும்.

4. முஸ்லீம்களுக்காக அனைத்து மாநிலம், யூனியன் பிரதேசங்களிலும் பல்கலை கழங்களை அரசு நிறுவ வேண்டும். மேலும் இந்த பல்கலை கழங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி முஸ்லீம் மாணவர்களின் நலனுக்காக செயல்படும் பல்கலை கழகங்களாக மாற்றப்பட வேண்டும். (பக்கம் 151)

5. அங்கன்வாடிகள், நொவோதியா விதியாலயாஸ் (பள்ளிகள்) போன்றவை முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஏற்படுத்தபட வேண்டும். முஸ்லீம்களின் குழைந்தைகளை இந்த பள்ளிகளுக்கு அனுப்ப முஸ்லீம் குடும்பங்களுக்கு மானியம் வழங்க வேண்டும். (பக்கம் 151)

6. முஸ்லீம்/கிருத்துவர்களாக மதம் மாறும் தலித்துகளுக்கு அவர்களின் சலுகை மீண்டும் கிடைக்கபெற வழிவகை செய்ய வேண்டும் (பக்கம் 153).
ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின் இரண்டாவது வால்யூமில் (பகுதி) பிற (அரசு மற்றும் அரசு சார) அமைப்புகள் நடத்திய ஆய்வுகளின் பரிந்துரைகளும் உள்ளது.


அதில் தேர்ந்தெடுத சில பரிந்துரைகளில் தனது அறிக்கையில் குறிப்பிடுகின்றார்.

அந்த பரிந்துரைகளில் சில :

1. கல்வியில் பின் தங்கி உள்ள முஸ்லீம் மாணவர்களுக்கு வட்டி இல்லா கடன் உதவி வழங்க வேண்டும். (பக்கம் 48 வால்யூம் 2)
2. சொந்த வீடு இல்லாத ஏழை முஸ்லீம்களுக்கு இலவசமாக வீடு கட்டி தரவேண்டும். (பக்கம் 49 வால்யூம் 2)
3. (பொருளாதாரத்தில் பின் தங்கிய) முஸ்லீம்களுக்கு சமையல் கேஸ் இனைப்பு மிக குறைந்தவிலையில் வழங்கபட வேண்டும்.

(பக்கம் 49 வால்யூம் 2)
4. அரசின் நலதிட்ட உதவிகள் பெருவதில் முஸ்லீம்கள் பெருமளவில் பின் தங்கிஉள்ளனர், எனவே அரசின் நலதிட்ட உதவிகள் பற்றி முஸ்லீம்களுக்கு அரசு விளிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நல திட்ட திட்ட உதவிகள் முஸ்லீம்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

(பக்கம் 48 வால்யூம் 2)
முஸ்லீம்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்க்கு இந்த பரிந்துரைகள் கட்டாயம் நடைமுறைபடுத்தபடவேண்டும்.


இந்த அறிக்கை அமல்படுத்தபட்டால் IAS,IPS, IFS , உள்துறை, உளவுதுறை என எல்லா மத்திய அரசு பணிகளிளும் 10-ல் ஒரு முஸ்லீம் இருக்க முடியும்.

காலத்தே பயிர் செய் எனபதுபோல் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி நாம் நமது குரலை அரசுக்கு உரக்க தெரிவிக்கவேண்டும்.

இன்ஷா அல்லாஹ்.



Thursday 1 April 2010

சாமியார்கள் வேண்டாம்! சாமியார்களை படைத்த இறைவன் ஒருவன் போதும் அனைத்திற்க்கும்.


இறைவனின் பெயரால் மக்களை ஏமாற்றும் கூட்டம் காலம் காலமாக இருந்துவருகின்றது. பணம், புகழ், உல்லாச வாழ்க்கைக்காக இந்த ஆசாமிகள் (போலி) சாமிகளாக மாறிவிடுகின்றனர்.
இந்த போலிசாமியார்களின் லிஸ்ட்டில் புதிதாய் சேர்ந்தவன் தமிழகத்தை சேர்ந்த ராஜசேகரன் என்கின்ற பரமஹம்ச நித்யானந்தா சுவாமிகள். பிரபல நடிகையுடன் மிககேவலமாக நடந்துகொண்ட காட்சிகள் தொலைகாட்சிகளில் வெளிவந்த பிறகு இந்த காம கொடூரனின் சுயரூபம் வெளி உலகத்திற்க்கு வந்தது. கடவுளாக மக்களால் வணங்கப்பட்ட இந்த காம கயவனை தமிழக, கர்நாடக அரசுகள் தேடி வருகின்றது.

ராஜசேகரன் என்கின்ற பரமஹம்ச நித்யானந்தா சுவாமி? :
திருவண்ணாமலையில் 1978-ல் பிறந்த இந்த ராஜசேகரன் முதலியார் சமூகத்தை சேர்ந்தவன். 12 வயதில் இந்த தொழிலுக்கு வந்தான். தமிழகத்தில் இவனுடைய பூச்சாண்டி எடுபடவில்லை என பெங்களூர் சென்றார். மக்களை கவரும் வண்ணம் பேச துவங்கியதால் இந்த தொழிலில் படுவேகமாக முன்னேறி மிக குருகிய வயதில் (போலி) கடளவுளானான்.

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இவனுக்கு கோயில் உள்ளது.. இவனுடைய கதவை திற காற்று வரும் என்கின்ற பேச்சு (புத்தக வடிவிலும் உள்ளது) இவனுக்கு பெரும் புகழை தேடிதந்தது. நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் இந்த (போலி) சாமியார் ஏற்படுத்தியுள்ள ஆசிரம கட்டமைப்பின் தலைமையகம் பெங்களூருக்கு வெளியே மைசூர் சாலையில் அமைந்துள்ளது.

இதன் கிளைகள் இந்தியாவின் அனைத்து பெருநகரங்களிலும் செயல்படுகின்றன. 33 நாடுகளில் 1200 மையங்களுடன் இயங்கும் அவரது தியானபீடங்களில் ஏராளமானவர்கள் தங்கி பயிற்சி பெறுகின்றனர். கல்லூரிகளில் பல பாடத் திட்டங்கள் இருப்பது போல நித்யானந்தா தியான பீடங்களிலும் பல தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கென கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கோடிக்கணக்கில் வருமானம் கொட்டுகிறது. தியானம் கற்று தருகின்றேன், ஆசனம் கற்று தருகின்றேன் என்ற பெயரில் பலகோடிகளை சம்பாதித்துள்ளான் இந்த விடலை பையன். உடல் தேவைகளுக்காக பல் வேறு நடிகளைகளுடன் விபசாரத்தில் ஈடுபட்டு இன்று காவல் துறைக்கு பயந்து தலைமறைவாகி உள்ளான் இந்த சில்மிஷ இளைஞன்.

பத்திரிக்கைகளும் (போலி) சாமியார்களும் :
தமிழகத்தில் ஒவ்வொரு சாமியாருக்கும் ஒரு ஆதரவான பத்திரிக்கை உண்டு. இந்த நித்தியானந்தாவின் ஆஸ்தான பத்திரிக்கை குமுதம் ஆகும், ஜக்கி வாசுதேவ், ரவிசங்கர் பாபா, சுகபோனந்தா இந்த நித்தியானந்தா போன்ற சாமியார்களின் கிருக்கு வார்தைகளை தத்துவங்களாக மக்களிடம் எடுத்து செல்வது இந்த குமுதம், விகடன், நக்கீரன் போன்ற பத்திரிக்கைகள்.
(ஜக்கி வாசுதேவின் ஆஸ்தான பத்திரிக்கை நக்கீரன்).

இந்த ஈன பிறவியை இன்டெர்னெட்டில் பிரபலமாக்கியது சாரு நிவேதிதா. குறி சொல்லும் பையனை கார்ப்ரேட் சாமியாராக மாற்றியது குமுதம் பத்திரிக்கையும் சாரு நிவேதிதாவும் தான்.

ஏன் இவர்கள் சாமியார்கள் ஆனார்கள்
இன்றைக்கு அரசியலைவிட மிக அதிகமாகவும் பாதுகாப்பாகவும் பணத்தை கொள்ளையடிக்கும் தொழிலாக இந்த சாமியார் தொழில் உள்ளது. பல கோடிகளை கொள்ளை அடிக்கும் (உயர்பதவிகளில் இருக்கும்) அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இந்த சாமியார்கள்தான் புகழிடம். ஊர் பணத்தை ஏமாற்றுகின்றோமே என மன உலைச்சலில் வாடும் இவர்களுக்கு இந்த சாமியார்கள் யோகா மூலம் மன உலைசலை நீக்கி மேலும் கொள்ளை அடிக்க வழிவகை செய்கின்றனர்.
மேலும் பண்ணாட்டு நிறுவங்களில் பல லட்சம் சம்பளம் வாங்குபவர்கள் பெரும் மன அழுத்தத்திற்க்கு ஆளாகின்றனர், இவர்களிடமும் தியானம் கற்று கொடுக்கின்றோம் என ஒரு நாளைக்கு ரூ.50,000 வரை வாங்குகின்றனர் இந்த கார்ப்ரேட் சாமியார்கள் . இப்படி கோடிகணக்கில் கொள்ளை அடிக்கும் பணத்திற்க்கு வருமான வரி கிடையாது.
இந்த சாமியார்களிடம் உள்ள பணத்தையும் சொத்துகளையும் பறிமுதல் செய்தாலே உலக வங்கியிடம் இந்தியா வாங்கி உள்ள கடனில் பெரும் பகுதியை அடைத்துவிடலாம் அவ்வளவு கோடிகணக்கான ரூபாய் மதிபுள்ள சொத்துகள்.
வீட்டில் கொள்ளை, வங்கியில் கொள்ளை என கேள்வி பட்டுஇருப்பீர்கள், எங்காவது ஆசிரமத்தில் கொள்ளை என கேள்வி பட்டதுண்டா, திருடர்கள் கூட திருடாத அளவிற்க்கு பாதுகாப்பான பணம்.

ஏன்? எங்கு? எப்படி? என்ற கேள்வி இல்லை : வருமான வரி துரை, சுங்க வரிதுரை இவை அதிகமாக சொத்துகள் வைத்து இருப்போரிடன் அவ்வப்போது சோதனை (ரைடு) நடத்தும். இந்த சாமியார்களுக்கு அது (ரைடு) கூட கிடையாது.

உல்லாச வாழ்க்கை : சாமியாராக இருப்பதினால் பெண்களிடம் அதிகமாக நெருங்கிபழகும் வாய்ப்பு கிடைக்கின்றது. இதைவைத்து (போலிஸ் தொல்லை இல்லாமல்) பல பெண்களிடம் விபசாரத்தில் ஈடுபட்டு உல்லாச வாழ்க்கை நடத்துகின்றனர் இந்த காம சாமியார்கள் .

புகழின் உச்சி : இந்த காம வெறிபிடித்தவர்களுக்கு கடவுளின் அவதாரம் என்ற பட்டம், கோயில் கட்டி வழிபட ஒரு அறியாமை கூட்டம். என்னேரமும் புகழ்ந்து தள்ள துதிபாடும் கூட்டம்.

கோடிகணக்கில் பணத்தை கொட்ட தயாராக இருக்கும் அப்பாவி மக்கள், (கோடிகணக்கான பணதிற்கும் வரிகட்ட தேவை இல்லை). திருடர்கள் கூட தொடப் பயப்படும் பாதுகாப்பான பணம், பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் சொகுசு வாழ்க்கை, சமுதாயத்தில் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும் (பிரதமர், குடியரசு தலைவராக இருந்தாலும்) காலில் விழுந்து வணங்கும் புகழின் உச்சி. இதற்க்குமேல் கடவுள் என்ற பட்டம். நினைக்கும் போதே கேட்பவர்களை சாமியாராக போய்விடலாமா என தூண்டக்கூடிய ராஜ வாழ்க்கை.

கடவுளின் பெயரால் பொய் சொல்லும் இவர்களுக்கு இப்படி பட்ட உல்லாச வாழ்க்கை ஆனால் இறைதூதரான முஹம்மது (ஸல்) அவர்கள் மேற்சொன்ன எந்த சுகத்தையும் அனுபவிக்காமல் மிகவும் கஷ்ட்டப்பட்டு (இஸ்லாத்தை) உண்மையான வாழ்க்கை நெறியை நமக்கு போதித்தார்கள். இதிலிருந்தே இஸ்லாம் இறைவனின் மார்க்கம் என நம்மால் உணர்ந்துகொள்ள முடிகின்றது.

இந்த சத்திய போதனைகளை சொல்ல இறைவனின் எந்த தூதர்களும் மக்களிடன் எந்த கூலியும் கேட்கவில்லை.அல்-குர் ஆன் 26:109 : உங்களிடம் நான் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. எனது கூலி அகிலத்தின் இறைவனிடமே இருக்கிறது.

இஸ்லாத்தில் மோசடி, பொய், விபசாரம் ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளது, எனவே இறைவனுக்கு கட்டுபட்டு வாழ்ந்தால் இதைவிட சிறந்த தூய்மையான வாழ்க்கையை இறந்த பிறகு இறைவன் தருவான் என்ற மறுமை நம்பிக்கையே நமக்கு நிரந்த சுகத்தைதரும்.

மக்களே! உண்மைமையான அமைதிபெற அழைக்கின்றது இஸ்லாம்
நாம் படும் கஷ்டங்களுக்கும் துன்பங்களுக்கும் மிக அழகான தீர்வை சொல்கின்றது இஸ்லாம். முழுமையான இறை நம்பிக்கை இல்லாமை, முறையற்ற வழியில் பொருளாதாரத்தை ஈட்டுவது (மோசடி, லஞ்சம்), விபசாரம், பொறாமை இது போன்ற தீய்மைகள்தான் மனிதனின் நிம்மதியை கெடுக்கின்றது. இந்த தீய்மைகளையெல்லாம் தடை செய்த இறைவன் இது போன்ற தீமைகள் இல்லாமல் எப்படி கவலையில்லாமல் வாழ்வது என்ற ஒரு வாழ்க்கை திட்டத்தை இஸ்லாம் என்ற வடிவில் வழங்கிஉள்ளான். உண்மையான இஸ்லாத்தை படித்து அதன்படி நடப்பதன் மூலம் நமது வாழ்க்கையை சிறந்த முறையில் அமைத்துகொள்ளமுடியும்.
அரசியல்வாதிகளே! அதிகாரிகளே! நீங்கள் மக்களிடம் அநியாயமான முறையில் (லஞ்சம், மோசடி) கொள்ளை அடிப்பதினால்தான் உங்கள் மனம் அமைதி இன்றி தவிக்கின்றது. போலீஸ் ரைடு வருமோ,பணம் திருடு போய்விடுமோ, நம்மால் பாதிக்கப்பட்டவன் நம்மை கொன்றுவிடுவானோ என்ற அச்சம் தான் உங்கள் மன உலைச்சலுக்கு காரணம். நேர்மையாக இருந்துபாருங்கள், மக்களுக்கு நல்லது செய்துபாருங்கள், லஞ்சம் வாங்காமல் இருந்துபாருங்கள், எத்தனை மக்கள் உங்களை பாராட்டுவார்கள்,பண்ணாட்டு நிறுவங்களில் (MNC) வேலை செய்பவர்களே! பதஷ்ட்டம் இல்லாமல் வேலை பாருங்கள், இந்த நிறுவங்கள் நம்மை வேலையைவிட்டு தூக்கிவிடுவதாக மிரட்டி அடிமைபோல் வேலைவாங்குகின்றனர். இதற்க்கு காரணம் அவர்கள் கொடுக்கும் சொகுசு வாழ்க்கைக்கு நாம் அடிமையாவதே, இவர்கள் வேலையைவிட்டு தூக்கிவிட்டால் எங்கே நாம் வாழும் சொகுசு வாழ்க்கை போய்விடுமோ என்ற பயத்தில் நாம் அடிமைகள் போல் வேலை செய்து கொண்டு இருக்கின்ரோம். சிக்கனத்துடன் வாழ பழகிகொண்டால் இவர்கள் மிரட்டல் நம்மை ஏதும் செய்யாது, மன அழுத்தமும் வராது. சாமியார்களுக்கு கொடுக்கும் பணமும் மிச்சமாகும்.

இஸ்லாத்தை உண்மை வடிவில் அறிய நம்மை படைத்த இறைவனின் வார்த்தையான குர் ஆனையும், அதற்க்கு விளக்கமாக ஹதீஸையும் படித்து தெரிந்துகொள்ளுங்கள். இலவசமாக குர் ஆன் Download செய்ய www.onlinepj.com என்ற இனைய தளத்திற்க்கு செல்லுங்கள்.

சாமியார்கள் வேண்டாம்! சாமியார்களை படைத்த இறைவன் ஒருவன் போதும் அனைத்திற்க்கும்.
நம்முடைய தேவைகளை பூர்த்திசெய்ய நம்மை படைத்த இறைவன் ஒருவன் போதும். இறைவனுக்கு இடைத்தரகர்கள் கிடையாது, அனைத்து செல்வங்களுக்கும் அதிபதி இறைவனே. சாமியாரோ சில கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிரார் இறைவனோ எப்போதும் உங்கள் கூடவே இருக்கின்றான்.என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால்
”நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்” (என்பதைக் கூறுவீராக!) (அல்-குர் ஆன் 2:186)

இறைவன் எல்லாவற்றிக்கும் அதிபதி என்பது உண்மையே, ஆனால் இறைவன் நமக்கு அதை (செல்வத்தை) வழங்குவானா?, நிச்சயம் வழங்குவான், அவன் கருனையாளர்களுக்கெள்ளாம் கருனையாளன்
சில நேரங்களில் ஏன் இறைவன் நம் பிரார்த்தனையை ஏற்பதில்லை ?:நமக்கு உள்ள பிரச்சனைகளுக்கு நாம் நமக்கு தெரிந்த தீர்வை இறைவனிடம் கேட்கின்றோம்
ஆனால் அதைவிட சிறந்த தீர்வை இறைவன் அறிந்து வைத்துள்ளான். நாம் கேட்பதை கொடுப்பதைவிட நமக்கு எது சிறந்ததோ அதைகொடுக்கின்றான் நம் இறைவன். நம் தேவைகளை நம்மை விட இறைவன் அதிகம் அறிந்தவன். நாம் இறைவனுக்கு கட்டுபட்டு நல்ல காரியங்களை செய்து நமது தேவைகளை தொடர்ந்து இறைவனிடம் கேட்டுகொன்டே இருப்போம் இறைவன் நமக்கு எப்போதும் சிறந்ததையே வழங்கிகொண்டு இருப்பான், இறைவன் வழங்கியதில் திருப்தி கொள்வோம், அமைதியாக வாழ்வோம் இன்ஷா அல்லாஹ்.

சங்பரிவாரத்தின் பார்பன பக்தி : இந்த நித்தியானந்த சாமியார் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதை கண்டித்து ஆசிரமங்களை சூரையாடும் இந்த சங்பரிவார கும்பல்கள், காஞ்சி சங்கராசாரியார் இதே போல் பெண்களிடம் சிலமிஷம் செய்ததாகவும், கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டபட்ட போது , காஞ்சி சங்கராசாரியாரின் ஆசிரமத்தை சூரையாடவேண்டியதுதானே. சங்கராசாரியார் விஷயத்தில் அடக்கிவாசித்தன இந்த சங்பரிவார கும்பல். ஏனென்றால் காஞ்சி சங்கராசாரியார் ஒரு பார்பனர். ஆனால் இவரோ ஒரு முதலியார். பார்பனர்களுக்கு ஒரு நீதி பாமரர்களுக்கு ஒரு நீதி என்ற மனு தர்மத்தை கடைபிடிக்கின்றனர் இந்த பார்பன விசுவாசிகள்.


(courtesy:www.tntj.net)